தெலுங்கு மொழியை இன்னும் 15 நாட்களுக்குள் கற்றுக்கொள்வேன் என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநராக நேற்று முன்தினம் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார்.

 பிறகு அவர் தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்கள் அனைவரிடமும் நான் நல்ல நட்புடன் இருக்க விரும்புகிறேன். அதற்கு ஏற்ப செயற்படுவேன். அதே சமயத்தில் நீங்கள் உங்களது கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

நான் தினமும் யோகா செய்து வருகிறேன். நீங்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். உடல் நலத்தை பேணிகாக்க வேண்டும்.

நான் இங்கு வந்து ஆளுநராக பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தெலுங்கானா மாநிலத்தின் சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி தெரிந்து வைத்துள்ளேன். எனவே அதன் அடிப்படையில் எனது ஆளுநர் பதவி பணிகள் இருக்கும்.

தெலுங்கு மொழியை இன்னும் 15 நாட்களுக்குள் கற்றுக்கொள்வேன். அதன் பிறகு என்னை சந்திப்பவர்களிடம் தெலுங்கில் சரளமாகப் பேசுவேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.