ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நீதிமன்ற கட்டளையை மீறி சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் இவர்களை இவ்வாறு விளக்கமறியலில் வைக்க மத்துகம பிரதான நீதிவான் உத்தரவிட்டார்.

ஏற்கனவே நீதிமன்றம் விடுத்த அறிவித்தல் ஒன்றுக்கு அமைவாக பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 6 பிரதிவாதிகளும் இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்தே, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.