ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம் வாக்குகளை வென்றெடுப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் அடங்கிய வரைவை ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன கைநூலாகத் தயாரித்துள்ளது.

இந்நூலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்த ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் இவ்வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை  மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பில் விளக்கமளிப்பதைப் படத்தில் காணலாம். 

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் செயலாளர் எம். அப்துல் சத்தார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.