பூகோ­ளப்­பந்தில் ஏற்­பட்­டுள்ள போட்­டித்­தன்­மையும் வேகமும் மிக்க வாழ்­வியல் போராட்­டத்தில் எவ்­ வ­ழி­யி­லா­வது சென்று வாழ்க்கை வட்­டத்தில் திழைக்க வேண்டும் என்­பதில் ஒவ்­வொரு மக்கள் தரப்­பி­னரும் வெவ்­வே­று­பட்ட சூட்­சு­மங்­களை கையாள துணி­கின்­றனர்.

புக­லி­டக்­கோ­ரிக்கை, உயர்­கல்வி, வேலை­வாய்ப்பு, திரு­மண பந்­தங்­க­ளென பல கார­ணங்­களை அடி­யொற்றி இந்த புலம்­பெயர் செயற்­பா­டுகள் நடை­பெற்று வரு­கின்­றன. இவற்றில் சட்­ட­வி­ரோ­த­மான புலம்­பெயர் செயற்­பா­டு­களும் இல்­லா­மலில்லை.

ஆகாய மார்க்­க­மாக சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வதில் பல்­வேறு நெருக்­க­டி­யான நிலை­மைகள் இருப்­பதால் அதி­க­ள­வா­ன­வர்கள் தமது உயிர்­களை கூட துச்­ச­மென மதித்து கடல்­மார்க்­க­மாக வெளி­யே­றிய, வெளி­யேற விளை­கின்ற சந்­தர்ப்­பங்­கள் குறித்து அன்­றாடம் செய்திகள் வெளி­யா­கின்­றன.

குறிப்­பாக, இலங்­கைத்­தீ­வா­னது நான்கு பக்­கங்­களும் கடலால் சூழ்ந்­துள்­ள­மையால் கடல்­மார்க்­க­மாக புலம்­பெ­யர்ந்து செல்ல அதி­க­ள­வா­ன­வர்கள் விளை­கின்­றார்கள். இவ்­வா­றான முயற்­சி­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் அதி­க­மாக அவுஸ்­தி­ரே­லியா நோக்­கியே பய­ணங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

இத்­த­கைய சட்­ட­வி­ரோத பய­ணங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­திய கடற்­பி­ராந்­தி­யத்தில் இலங்­கையும், அவுஸ்­தி­ரே­லி­யாவும் இறை­யாண்மை எல்­லைகள், பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை கூட்­டாக முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

இதனால் பல்­வேறு சட்­ட­வி­ரோத கடற்­ப­யண முயற்­சிகள் தடுக்­கப்­பட்­டுள்­ள­தோடு சொல்­லொண்ணாத் துன்­பங்­க­ளுக்கு மத்­தியில் சட்­ட­வி­ரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லி­யாவை அடைய முற்­பட்­ட­வர்­களும் பாது­காப்­பாக காப்­பாற்­றப்­பட்டு மீண்டும் நாட்­டுக்கே திருப்பி அனுப்­பப்­பட்ட பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

கடந்த புதன்­கி­ழமை இலங்­கைக்கு விஜ­யம் ­செய்த அவுஸ்­தி­ரே­லி­யாவின் இறை­யாண்மை எல்­லைகள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களின் பொறுப்­ப­தி­காரி மேஜர் ஜெனரல் கிரேக் புரூணி, நீர்­கொ­ழும்பு மீன்­பிடித் துறை­மு­கத்­திற்கு விஜயம் செய்­த­தோடு அங்கு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலும் பங்­கேற்­றி­ருந்தார்.  

பொறுப்­ப­தி­கா­ரியின் விஜயம் குறித்த செய்தி சேக­ரிப்­பிற்­காக, அங்­கு ­சென்­றி­ருந்தபோது, நீர்­கொ­ழும்பு மீன்­பிடித் துறை­முகப் பகு­தியில் இருந்த ஒரு சில கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளி­டத்தில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான கடற்­ப­யணம் இங்கு நடை­பெ­று­கின்­றதா, எப்­படி இந்த பய­ணங்­களை மேற்­கொள்­கின்­றார்கள், யார் இதனை செய்­கின்­றார்கள்? என்­பது குறித்த கேள்­வி­களைக் கேட்­ட­போது ஒரு­சில தக­வல்­களை பகிர்ந்து கொண்­டார்கள்.

குறிப்­பாக தமது பெயர், விப­ரங்­களை வெளி­யி­டா­தீர்கள் என்ற நிபந்­த­னை­யுடன் அந்த கடற்­றொ­ழி­லா­ளர்கள் கூறு­கையில், ''நாங்கள் அவ்­வா­றான விட­யங்­களைச் செய்­வ­தில்லை. ஆனால் பட­கு­களில் அவுஸ்­தி­ரே­லியா நோக்கி கூட்டிச் செல்­ப­வர்கள் இல்­லா­ம லில்லை. அவர்­க­ளுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்­றனர்.

அத்­துடன், 'அவ்­வாறு பட­கு­களில் அழைத்துச் செல்­ப­வர்கள் நேர­டி­யாக அவுஸ்­தி­ரே­லியா கடற்­க­ரையில் சென்று விடு­வ­தில்லை. மாறாக இலங்கை கடற்­ப­ரப்­பி­லி­ருந்து 2ஆயிரம் முதல் 2500 கடல்­மை­ல்கள் தொலைவில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அண்­மித்­துள்ள பாது­காப்­பான தீவுகள் மற்றும் மணற் திட்­டுக்­களில் விட்­டு­விட்டு வரு­வார்கள். அவ்­வாறு செல்லும் போது கடற்­ப­டை­யினர் கைது செய்தால் ஒன்றும் செய்­ய­மு­டி­யாது” என்றும் அந்தக் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கூறி­னார்கள்.

மேலும், ''தற்­போ­தைய காலத்தில் நப­ரொ­ரு­வ­ருக்கு இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை­யி­லான பணத்­தினை வசூ­லித்த பின்­னரே படகில் அவர்­களை ஏற்றிச் செல்­கின்­றார்கள் என்றும் கடற்­ப­டை­யி­ன­ரி­டத்தில் கைதானால் அப்­பணம் திருப்பி அளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் இதற்­கான வேறு நபர்கள் இருப்­ப­தா­கவும் அவர்­க­ளுடன் தான் நீங்கள் மீதி விட­யங்­களை பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்றும் அந்த கடற்­றொ­ழி­லா­ளர்கள் குறிப்­பிட்­டனர்.

இவ்­வா­றி­ருக்க, நீர்­கொ­ழும்பு மீன்­ பி­டித்­ து­றை­மு­கத்­திற்கு வரு­கை­ தந்­தி­ருந்த  அவுஸ்­தி­ரே­லி­யாவின் இறை­யாண்மை எல்­லைகள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களின் பொறுப்­ப­தி­காரி மேஜர் ஜெனரல் கிரேக் புரூணி, இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தானி டேவிட் ஹொலி, இலங்கை கடற்­ப­டையின் செயற்­பாட்டு பணிப்­பாளர் ரியர் அட்­மிரல் நிராஜ் ஆட்­டி­கல ஆகியோர் ஊட­க­ வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கருத்­துக்­களை வெளி­யிட்டனர்.

முதலில் இலங்கை மற்றும் மாலை ­தீ­வுக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தானி டேவிட் ஹொலி கூறு­கையில்,

''சட்­ட­ வி­ரோத மனிதக் கடத்­தல்­களை மிகுந்த சவால்­க­ளுக்கு மத்­தியில் தடுத்­து­வ­ரு­வ­தாக கூறி­ய­தோடு அவ்­வா­றான மனி­தக்­க­டத்­தல்கள் இடம்­பெறும் பகு­தி­களில் ஒன்­றாக நீர்­கொ­ழும்பு கடற்­ப­ரப்பும் காணப்­ப­டு­வ­தாக பல்­வேறு மூலங்­களிலிருந்து தெரி­ய­வந்­தி­ருப்­ப­தா­கவும் கூறினார்.

எவ்­வா­றா­யினும், கடல்­மார்க்­க­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு எந்­த­வொரு சந்­தர்ப்­பமும் வழங்­கப்­பட மாட்­டாது என்ற உறு­தி­யான நிலைப்­பாட்டில் நாம் இருக்­கின்றோம். அந்த தக­வலை மீண்டும் மக்­க­ளுக்கு கூறு­கின்றோம்'' என்றார்.

இதே­வேளை, குறு­கிய கால இடை­வெ­ளிக்குள் இரண்­டா­வது தட­வை­யாக இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்கும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் இறை­யாண்மை எல்­லைகள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களின் பொறுப்­ப­தி­காரி மேஜர் ஜெனரல் கிரேக் புரூணி,

''படகு மூலம் சட்­ட­வி­ரோ­த­மாக புலம் பெயர்­வ­தனால் ஏற்­படும் ஆபத்­துக்கள் மற்றும் நீண்­ட­கால பின் விளை­வுகள் ஏற்­ப­டு­கின்­றன. 2013 ஆம் ஆண்டில், இறை­யாண்மை எல்­லைகள் பாது­காப்பு நட­வ­டிக்கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதி­லி­ருந்து 2018 வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 820 சட்­ட­வி­ரோத கடற்­ப­ய­ணங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தோடு 50ஆயிரம் பேர்­வ­ரை­யி­லா­ன­வர்கள் உட்­பி­ர­வே­சிக்க விளைந்­துள்­ளனர். அவர்கள் அனை­வரும் திருப்­பியே அனுப்­பப்­பட்­டுள்­ளனர்.

இலங்­கை­யுடன் இணைந்து பணி­யாற்றிய ஆரம்­பத்­தி­லி­ருந்து, 12 ஆட்­க­டத்தல் பட­கு­களில் பிர­வே­சிக்க முயன்ற 204 பேர் இது­வ­ரையில் திருப்பி அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு எந்த ஒரு­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்­கான பய­ணத்தில் வெற்றி பெற­வில்லை.

இந்த ஆண்டின் மே இல் இரண்டு பட­கு­களில் 25 பேரும், ஜுனில் 5பேரும், ஜுலையில் 13 பேரும் கைது செய்­யப்­பட்டு உட­ன­டி­யாக திருப்பி அனுப்­பப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் 2013 இலி­ருந்து வரு­டந்­தோறும் தலா 10பட­குகள் இலங்கை கடற்­ப­ரப்­பி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்­த­போதும் 2018ஆம் ஆண்டு இரண்டு பட­கு­களும், இந்த ஆண்டு இது­வ­ரையில் மூன்று பட­கு­க­ளுமே வரு­கை­தந்­துள்­ளன. ஆகவே இலங்­கை­யு­ட­னான கூட்டு நட­வ­டிக்­கை யில் கணி­ச­மான முன்­னேற்றம் உள்­ளது.

எமது நாட்டின் தீவிர எல்லை பாது­காப்பு கொள்­கை­க­ளின்­படி, சட்­ட­வி­ரோ­த­மாக படகு மூலம் பயணம் செய்­ப­வர்கள், அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிப்­ப­தற்கோ அல்­லது தொழில் புரி­வ­தற்கோ அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்கள்.  அவ்­வா­றான முயற்­சியில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யாக புலம் பெயர்­வ­தற்கு அவர்­க­ளுக்கு உள்ள ஏதேனும் வாய்ப்பை சுய­மா­கவே இழந்து விடு­கின்­றனர்.

அத்­துடன் சட்­ட­வி­ரோ­த­மாக உட்­பி­ர­வே­சிக்க முயன்ற எந்­த­வொரு நபரும் முகாம்­களில் கூட தடுத்து வைக்­கப்­ப­ட­வில்லை. கடந்த ஜுன் மாதம், சாத்­தி­ய­மான சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் ஆட்­க­டத்தல் வியா­பா­ரத்தில் இணைந்து கொள்­வதைத் தடுக்க

''பூச்­சிய வாய்ப்பு" என்ற பிர­சா­ரத்தை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம்.

மேலும், அண்­மைக்­கா­லத்தில் அவுஸ்­தி­ரே­லிய அர­சியல் நிலை­மைகள் மற்றும் இலங்­கையின் உள்­நாட்டு நிலை­மை­களை பயன்­ப­டுத்தி சட்­ட­வி­ரோத பய­ணங்கள் அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருக்­கின்­ற­மையால் தான் இலங்­கைக்கு வருகை தந்து எனது அறி­வு­றுத்­தலை நட்­புடன் விடுக்­கின்றேன்'' என்றார்.

இலங்கை கடற்­ப­டையின் செயற்­பாட்டு பணிப்­பாளர் ரியர் அட்­மிரல் நிராஜ் ஆட்­டி­கல கூறு­கையில், ''பட­கு­மூலம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு செல்­வது என்­பது எதிர்­பார்ப்­பற்ற சிந்­த­னை­யாகும். பட­கு­மூலம் சென்று அங்கு புக­லி­டக்­கோ­ரிக்­கை­யையும் முன்­வைக்க முடி­யாது. நீர்­கொ­ழும்பு மீன்­பிடித் துறை­மு­கத்தில் மாத்­திரம் அறு­நூ­றுக்கும் மேற்­பட்ட பட­குகள் காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு பட­கையும் தனித்­த­னி­யாக பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­து­வது என்­பதும் மிகவும் கடி­ன­மான பணி­யாகும். காலி, மிரிஸ்ஸ போன்ற பகு­தி­க­ளிலும் இதுதான் நிலைமை. இதனால் பலத்த சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­த­வா­று உள்ளோம்'' என்றார்.

இதே­வேளை, அவுஸ்­தி­ரே­லிய பொறுப்­ப­தி­கா­ரியின் கள ­வி­ஜயம் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து  அவ்­வி­டத்தில் பிர­சன்­ன­மா­கிய அகி­ல­ இ­லங்கை ஆழ்­கடல் மீன்­பிடி பட­குகள் உரி­மை­யாளர் சங்­கத்தின் தலைவர் சுஜித் சமந்த, ''மீனவப் பட­கு­களில் மனி­தக்­க­டத்­தல்கள் எவையும் நடை­பெ­ற­வில்லை. மீன­வர்கள் மீது வீண்­பழி சுமத்தப்பட்டு அவர்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இலங்கைக்கு 175மில்லியன் டொலர்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதனைப் பெற்றுக்கொள்வதற்கே  இத்தகைய மிகைப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுப்பதற்கு முன்னதாக எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி வருகை தரும் மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படையால் ஏன் தடுக்க முடியாதிருக்கின்றது. அத்துமீறும் படகுகளை தடுத்தால் மீனவர்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்'' என்றார்.

எவ்வாறாயினும், புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸி.புகலிடமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றாலும் அந்நாடு அதற்கு இடமளிக்காது என்று பகிரங்கமாக அறிவித்தபின்னர் உயிராபத்து மிக்க சவாலை கையிலெடுப்பது பயனற்றதொன்றாகும்.  

அதேநேரத்தில் சட்டவிரோத படகுபயணங்களை தடுப்பதன் பேரில் அன்றாட வாழ்வுக்காக போராட்ட மிக்க தொழில்புரியும் கடற்றொழிலாளர்களை சிரமத்துக்குள்ளாக்குவதும் பொருத்தமற்றதொன்றாகின்றது. ஆகவே உணர்வு ரீதியான வாழ்வுரிமை விடயத்தினை பாதிப்பற்ற வகையில் கையாள்வது மிகவும் முக்கியமானதொன்றாகின்றது.

(ஆர்.ராம்)