தல்தொட்டுவ - உடவல பகுதியில் முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அவரது மனைவி , குழந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த முச்சக்கரவண்டி கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த முச்சக்கரவண்டி வழிமறித்து கடத்த முற்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியை கடத்த முற்பட்டதை அவதானித்த அப்பிரதேச மக்கள் உடனடியாக செயற்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

அத்தோடு கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை பிரேதச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.