இங்­கி­லாந்தில் பழைய பய­னற்ற விமா­னத்தை சுற்­றுலா முகா­மாக, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடி­வ­மைத்து அசத்­தி­யுள்­ளனர்.

ஏர்பஸ் ஏ319 விமானம், கடந்த 30 ஆண்­டு­க­ளாக ஏர் கனடா, ஏர் மால்டா, எத்­தியாட் ஏர்வேஸ் விமான நிறு­வ­னங்­க­ளிடமிருந்­தது. பணியிலிருந்து நீக்­கப்­பட்ட அந்த விமானம் பய­னற்றுக் கிடந்த நிலையில், அதனை இந்­திய மதிப்பில் 35 இலட்சம் ரூபாய் கொடுத்து வாங்­கிய சவுத் வேல்ஸைச் சேர்ந்த டோபி ரைஸ் டேவிஸ் (Toby Rhys Davies) 500 பேர் பய­ணிக்கக் கூடிய விமா­னத்தை 2 பாகங்­க­ளாக வெட்டி சமை­ய­லறை, குளி­ய­லறை, வர­வேற்­பறை, 4 பேருக்­கான படுக்கை அறை­களை அறை­க­லன்­க­ளுடன் வடி­வ­மைத்தார்.

அத்­துடன் பல்­கனி, பார்­பிக்யூ சமைப்­ப­தற்­காக வெளியே தனி­யிடம், ஓய்­விடம் ஆகி­ய­வற்றை வடி­வ­மைத்து சுற்­றுலா முகா­மாக மாற்­றி­யுள்ளார். இங்கு தங்­கு­வ­தற்கு ஓரி­ர­வுக்கு இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.