ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 42 ஆவது கூட்டத்  தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் அதில் ஆரம்ப உரையை நிகழ்த்திய ஐக் கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  மிச்செல் பச்லெட் இலங்கை  தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் பிரஸ்தாபிக்கவில்லை.

இலங்கையில் புதிய இராணுவ தளபதி நியமனம் குறித்து எழுந்த சர்ச்சை  தொடர்பில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  மிச்செல் பச்லெட்  பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்  அவர் எந்தக் கருத்தையும் வெ ளியிடவில்லை.

மேலும் இலங்கை தொடர்பாக 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நீடிக்கப்பட்ட  பிரேரணையின் அமுலாக்கம்  தொடர்பாக   மதிப்பீடுகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும்  இலங்கை குறித்து எந்த விடயம் தொடர்பாகவும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  மிச்செல் பச்லெட் உரையாற்றவில்லை.

நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 42 ஆவது கூட்டத்  தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.