மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29 வது ஆண்டு நினைவு தினம் இன்று நடைபெற்றது.

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லீம் ஊர்க்காவல் படையினரால் சத்துருக்கொண்டான் , கொக்குவில்,பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார் உட்பட பச்சிளம் குழந்தைகள் ,ஆங்கவீனம் அடைந்தவர்கள் என 186 பேரை அழைத்துச் சென்று படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்  படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான விசாரணைகள் நடைபெற்ற போதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.