மீகஹகிஹுல, துலாலிந்த வனப்பகுதிக்கு இனந்தெரியாத சிலர் இன்று (09) பகல் 1.30 மணியளவில்  தீ வைத்துள்ளதாக வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அக்கலா உல்பத கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாதைகள் அற்ற அடர்ந்த வனப்பகுதியில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு செல்வது கடினம் எனவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த வனப்பகுதியில் , பன்றிகள், மான்கள் மற்றும் மரைகள் அதிகளவில் உள்ள நிலையில், அவற்றை வேட்டையாடுவதற்காக இவ்வாறு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என கிராமவாசிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை தீப்பரவலை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.