இலங்கை நிர்மாண சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெகாபொலிஸ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கருத்தரங்குக்கான ஏக அனுசரணையை டோக்கியோ சீமெந்து வழங்கியிருந்தது. 

“மேல் மாகாண மெகாபொலிஸ் அபிவிருத்தித் திட்டம் - இது துரிதப்படுத்தப்படலாமா?” எனும் தலைப்பில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடாலி சம்பிக ரணவக்க  தலைமைத்துவம் வகித்திருந்தார்.

இந்த கருத்தரங்கின் போது பிரேரிக்கப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களின் மூலமாக நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய சமூகபொருளாதார அனுகூலங்கள் பற்றி ஆராயப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் பங்குபற்றிய விருந்தினர்களில் துறைசார்ந்த நிபுணர்கள், வியாபார தலைவர்கள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவோர் என பலரும் அடங்கியிருந்தனர். 

பேச்சாளர்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்மாணத்துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி சொலூஷன் நிபுணர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். 

இதில் இலங்கை நிர்மாண சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி. சுரத் விக்ரமசிங்க, மேல் மாகாண மெகாபொலிஸ் செயற்திட்ட திட்டமிடல் அலுவலகத்தின் செயற்திட்ட பணிப்பாளர் லக்ஷ்மன் ஜயசேகர, இந்திய கட்டடக்கலைஞர்கள் கல்வியகத்தின் சர்வதேச விவகார சபையின் செயற்திட்ட பணிப்பாளர் லக்ஷ்மன் ஜயசேகர, இந்த சபையின் தலைவர் பிரகாஷ் தேஷ்முக், இந்திய அரசாங்க விவகாரங்களுக்கான UTC பணிப்பாளர் சமிட் ரே, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து பொறியியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ஜி.எல். திமந்த டி சில்வா மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் ஆகியோர் அடங்கியிருந்தனர். 

இவர்கள் மெகாபொலிஸ் செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பில் தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர்.

இந்நிகழ்வில் விசேட வீடியோ செய்தி ஊடாக கருத்து தெரிவித்த மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடாலி சம்பிக ரணவக்க,

“கடந்த காலங்களை போலல்லாமல், சமூக, சூழல் மற்றும் கலாசார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாம் செயற்திட்டங்களை முன்னெடுக்கமாட்டோம். 

நேர்த்தியான தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக எமது மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தையும்ரூபவ் சிறந்த வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். 

மஹாவலி திட்டத்தைத் தொடர்ந்து, தேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் அபிவிருத்தித் திட்டமாக மெகாபொலிஸ் அமைந்திருக்கும். நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கு போட்டிகரமான அனுகூலத்தை பெற்றுக் கொள்வது என்பது எமது இலக்காக அமைந்துள்ளது” என்றார்.

மேல் மாகாண மெகாபொலிஸ் அபிவிருத்தி செயற்திட்டம் என்பது கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளையும், டோக்கியோ மற்றும் சிங்கப்பூர் போன்று தரமுயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. திட்டமிடப்பட்ட, நிலைபேறான நகர அபிவிருத்தித்திட்டங்கள் மூலமாக மேல் மாகாணத்துக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் அனுகூலம் சேர்க்கப்படும்.

இந்த செயற்திட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட உப செயற்திட்டங்கள் உள்ளடங்கியிருக்கும். இலங்கையின் நிர்மாணத்துறையில் மெகாபொலிஸ் திட்டம் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. 

சர்வதேச தரங்களுக்கமையநிலைபேறான அலங்கார மற்றும் நிர்மாண வழிமுறைகளை பேணி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்ததிட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிர்மாண நடவடிக்கைகள் அனைத்துக்கும் சூழலுக்கு நட்புறவான வகையில் அமைந்திருக்கும்.

நிலைபேறான கொள்கைகளும் பின்பற்றப்படும். இந்த செயற்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கும் வகையில்ரூபவ் இந்த கருத்தரங்குக்கான பிரதான ஏக அனுசரணையை டோக்கியோ சீமெந்து வழங்கியிருந்தது. 

நிறுவனத்தின் மூலமாக சூழலுக்கு நட்புறவான உற்பத்தி செயற்பாடுகள் கைக்கொள்ளப்படுவதுடன் அதன் மூலமாக புத்தாக்கமான சீமெந்து மற்றும் கொங்கிரீற் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை வலுச்சிக்கனம் மற்றும் கழிவு குறைவு போன்றவற்றில் பங்களிப்பை வழங்குகின்றன. 

மேலும், பாரியளவிலான செயற்திட்டங்களுக்கு அவசியமான பெருமளவு சீமெந்து மற்றும் கொங்கிறீற் கலவைகளை உற்பத்தி செய்வதற்கு தன்வசம் காணப்படும் திறன் மற்றும் இயலுமைகளையும் வெளிப்படுத்தியிருந்தது.

துறையைச் சேர்ந்த நிபுணர்கள், வியாபாரத் தலைவர்கள் மற்றும் முதலிட எதிர்பார்ப்பவர்கள் ஆகியோருக்கு தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு சிறந்த களமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.