வெலிகம , பண்டாரவத்த பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது  9 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கைதுசெய்யப்பட்டனர். 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பெண்களில் 21 வயதுடைய இளம் பெண்ணொருவரும்  மற்றவர்கள் அனைவரும்  40 வயதுடையோர் எனவும் தெரிவித்தனர்.

இதில் சில பெண்கள் தங்களது குழந்தைகளையும் குறித்த விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பெண்களின்   கணவன்மார் கடற்றொழிலாளர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்களில் இருவர் இதற்கு முன்பும் சூாதாட்டத்தில் ஈடுபட்டதன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 20 ஆயிரம் ரூபா  பணத்திற்கான சீட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.