“சாத்தியமற்ற உறுதி மொழிகளை வழங்குவதை அரசியல் தரப்பினர் தவிர்க்க வேண்டும். இவ்வாறான உறுதி மொழிகளை வழங்குபவர்கள் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

சமகால தேர்தல்களம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில்மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

நாடு தற்போதிருக்கும் நிலையில் பொதுமக்களுக்குரிய சேவைகளை வழங்க ஏழரை லட்சம் தொடக்கம் 8 லட்சம் பேர் வரையிலான அரச ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் எனக் கணிப்பிடப்படுகிறது.

எனினும் 15 லட்சம் பேர் தற்போது அரச சேவை யில் உள்ளனர் என்கிறது தரவு. உலகிலேயே அதிக அரச ஊழியார்கள் பணிபுரி யும் நாடுகளில் ஒன்றாகவும் இலங்கையும் இருக்கின்றது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த பரப்புரைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இதில் களமிறங்கும் தரப்புகளிடமிருந்து அரச தொழில் வாய்ப்புகள் தொடர்பில் சாத்தியமற்ற உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன. இவை நாளாவட்டத் தில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தத்தமது வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்படும் இதுபோன்ற உறுதி மொழிகள் குறித்து மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சிறுபான்மை மக்கள் மிகவும் ஆழமாகச் சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள வேண் டும்.

ஏனெனில் 2015 ஆண்டு நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இந்த தேசிய அரசின் மூலமாக தமது அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என தமிழ்பேசும் சமூகங்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டு செயற்பட்டன. இதற்கு உறுதிதரும் விதத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்புசபை யாக மாற்றப்பட்டுரூபவ் அதில் அங்கத்துவம் கொண்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டு, குழுக்கள் உருவாக்கப்பட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கான பணி கள் முன்னெடுக்கப்பட்டன.

ஈற்றில் நடந்தது என்ன? ‘பழைய குருடி கதவை திறவடி’ என்;ற நிலையில் அனை த்து செயலிழந்துபோயின. இதற்குப் பிரதான காரணியாக அமைந்தவைரூபவ் அனைத்து கட்சிகளும் தலைமைகளும் தத்தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சுயலாப அரசியலில் இறங்கியமையாகும்.

இந்த நடைமுறையானது சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகள் எட்டப் படும் என்ற நம்பிக்கையை அடியோடு தகர்த்து இனியும் இவர்களை நம்பலாமா? என்ற கேள்வியையே எழச்செய்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் களமானது வாக்குறுதிகளை வழங்கினால் அதை மக்கள் நம்பி - ஏற்றுச் செயல்படுவார்கள் என்ற நிலையை முற்றாக ஒதுக்கிதள்ளியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வழங்கப்படும் உத்தரவாதங்கள் உறுதி யுள்ளவையாக - உத்தரவாதம் தரும் ஏற்பாடுகளைக் கொண்டவையாக இருக்கும் பட்சத்திலேதான் தமது ஆதரவை தர மக்கள் முன்வருவார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மக்களை மடையர்களாக்கும் உத்தரவாதங்களை வழங்குவதை வேட்பாளர்களும் அவர்களை சார்ந்தோரும் நிறுத்திவிட்டு ஆரோக்கியமான உத்தரவாதங் களை வழங்கி நிரந்தரமான அதிகார பகிர்வு கிடைப்பதற்கான வழிவகைளை மேற்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.