வவுனியா வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து திருநாவற்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ரயில் நிலைய வீதியில் சென்று கொண்டிருந்த போது அருகிலிருந்து வீதிக்கு ஏற முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த த.பிரகலாதன் வயது 45 என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.