(நா.தினுஷா)

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் இதற்கான தீர்வு காணப்படும் என்று திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு  செய்வதில் ஐக்கிய தேசிய கட்சியில் எவ்வித சிக்கலும்  கிடையாது. ஆனால் வேட்பாளர்  யார்  என்பதை ஐக்கிய தேசிய கட்சியே முடிவு செய்ய வேண்டும். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே நாம் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம். வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனவே வேட்பாளர் பிரச்சினைக்கு இன்னும் இரண்டு  வாரங்களின் முடிவை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.