ஒஸ்லோ போய்ஸ் பவுண்டேசனின் நிதியீட்டத்தில் எல்.பீ.ஆர் பவுண்டேசன் மற்றும் அதன் பங்காளி நிறுவனமான டீ.லீப் விசன் இணைந்து மஸ்கெலியாவில் மேற்கொண்ட  இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று நேற்று (08.09) மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கண் சிகிச்சை முகாம் மஸ்கெலியாவிலுள்ள டீ லீப் விசன் பாடசாலையில் நேற்று காலை முதல் இடம்பெற்றது. இதில் மஸ்கெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

சுமார் 250 க்கும் மேற்பட்ட மக்கள் குறித்த முகாம்  மூலம் பயன் பெற்றுக்கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கண் சிகிச்சை முகாம் ஒஸ்லோ போய்ஸ் பவுண்டேசனால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பயனாளிகளுக்கான மூக்கு கண்ணாடிகள் மற்றும் கண்படல சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான அனைத்து செலவுகளையும் ஒஸ்லோ போய்ஸ் பவுண்டேசன் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா பகுதியில் இயங்கிவரும் டீ லீப் விசன் பாடசாலை எனும் தனியார் ஆங்கில இலவச பாடசாலையானது கடந்த ஐந்து வருடத்துக்கும் மேல் லிபாரா பவுண்டேசன் நிறுவனத்தின் பங்காளித்துவத்துடன் அப்பகுதியில் வறுமையில் வாடும் வறிய மாணவர்களுக்கு ஆங்கில அறிவை புகட்டுவதோடு இவ்வாறான இலவச முகாம்களை நடாத்தி மலையக மாணவர்களுக்கும் மக்களுக்கும் அழப்பெரிய சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.