முத்தம் கொடுக்க மறுத்ததால் மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு  படிக்கும் மாணவி  கடந்த வியாழக்கிழமை தனது காதலுடன் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அதன்பின் வீட்டிற்கு அவர் திரும்பவில்லை. மாணவியை தேடிய குடும்பத்தினர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார் மாணவியை தேடி வந்த நிலையில் வனப்பகுதியில் கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றியுள்ளனர். 

தலையின் பின்புறம் காயம் அடைந்த நிலையில் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய பொலிஸார் காதலனை  அழைத்து விசாரித்தனர். விசாரணையில் மாணவியை கொலை செய்தது தான் என ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் மறுத்ததால் அவரை பின்னோக்கி தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கீழே விழுந்ததில் மாணவியின் தலைப்பகுதி கல்லில் பட்டு காயமடைந்து அவர் உயிரிழந்ததாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காதலனை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.