யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கருகிலுள்ள ரயில் கடவையருகில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிலிருந்து கொழுப்பு நோக்கி பயணித்த உத்தரதேவி ரயிலுடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.