வினைத்திறனான புகையிரத சேவையை பயணிகளுக்கு வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கண்டி - மாத்தளை, கண்டி - கம்பளை மற்றும் கண்டி - ரம்புக்கணை புகையிரதப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொல்கஹவெலயில் இருந்து குருநாகல் வரை இரண்டு இரட்டைப்பாதை தண்டவாளங்கள் இடப்படும் என்றும் களனிவெலி புகையிரதப் பாதைக்கு மின்சார புகையிரதம் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.