கொழும்பிலிருந்து புத்தளம் அருவக்காட்டிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒள்று முன்னாள் சென்ற டிப்பர்  வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

முன்னாள் சென்ற வாகனம்  வேகத்தை குறைக்க முற்பட்ட போதே குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. 

இச்சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் சென்ற டிப்பர் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும்   இதே வேளை விபத்துக்குள்ளான  வாகனத்தில் சென்ற சாரதிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.