கேகாலை, தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் காணாமல் போனவர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தெஹியோவிட்ட பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில்  மூன்று பேர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் இடம்பெற்று வந்த மீட்பு பணிகளில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் இரெக்ட் தமிழ் வித்தியாலய அதிபார் இலட்சுமணன் (வயது 55) என தெரிவிக்கப்படுகின்றது.