இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது. 

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 ஆவது போட்டி மான்சஸ்டரில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமானது. 

இதில் முதல் அவுஸ்திரேலிய அணி 497 ஓட்டங்களையும், இங்கிலாந்து 301 ஓட்டங்களையும் குவித்தன. அடுத்து 196 ஓட்ட முன்னிலையுடன் ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி  6 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்களை குவித்து, ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் டக்கவுட்டுகளுடன் வெளியேறி அதிர்ச்சியை அளித்தது. 4 ஆவது நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 18 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5 ஆவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இங்கிலாந்து அணி வீரர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 185 ஓட்டத்தினால் படுதோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ டென்லி 53 ஓட்டத்தையும், ஜோசன் ரோய் 31 ஓட்டத்தையும், ஜோனி பெயர்ஸ்டோ 25 ஓட்டத்தையும், ஜோஸ் பட்லர் 34 ஓட்டத்தையும், கிரேக் ஓவர்டன் 21 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டத்துடனும், டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும், ஹேசல்வூட் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக், லபுசன்கி ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றிமூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இவ்விரு அணிகள் இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இ

ந்த வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணிக்கு உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 24 புள்ளிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.