ஜப்பானில் ஏற்ப்பட்ட சூறாவளியின் காரணமாக 206 விமானங்கள் நேற்றய தினம் ரத்து செய்யப்பட்தாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியை நேற்று ‘பக்சாய்’ எனப்படும் புயல் தாக்கியது. 

இப் புயலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை, இப் புயலை முன்னிட்டு ஜப்பான் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

குறிப்பாக புயல் நகரும் பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்நிலையிலேயே அந்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

அத்தோடு அந்நாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டோக்கியோ, ஒசாகா இடையே 117 புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.