அனுராதபுரம் கல்கிரியாகம பகுதியிலுள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 30 மற்றும் 27 வயதுடைய இரு சகோதரர்களே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.