(எம்.மனோசித்ரா)

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரே தினத்தில் சுமார் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள அனைவரும் சிறந்த பயிற்சி பெற்ற ஆசியர்கள் என்பதோடு, நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய சக்தி இவ் ஆசிரியர்களிடமே காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இவ் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

சிங்கள மொழி மூலம் 2,340 ஆசியரிகள், தமிழ் மொழி மூலம் 1,300 ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில மொழி மூலம் 646 ஆசிரியர்கள் உள்ளடங்களாகவே இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.