(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராயும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரதித்தலைவரும்  அமைச்சருமான  சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று இடம்பெற்றவிருந்த சந்திப்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிகழ்வுகளை உடனடியாக நிறுத்த முடியாத காரணத்தினால் சந்திப்பை நாளைமறுதினம் வரை அமைச்சர் சஜித் பிரேமதாச ஒத்திவைத்துள்ளார் என அறிய முடிகின்றது. 

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை குறித்து இறுதி தீர்வு எட்டும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேரடியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில்  இன்று இருவரையும் ஒரு மேசையில் அமர்த்தி தீர்வுகளை காண நடவைக்கை எடுப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. 

அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பை நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் கூட கடந்த சனிக்கிழமை இந்த பேச்சுவார்த்தை திகதி பிட்போடப்பட்டுள்ளது. 

அமைச்சர் சஜித் பிரேமதாச ஏற்கனவே சில முக்கிய நிகழ்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை கைவிட முடியாது என்ற காரணிகளை கூறியதற்கு அமைய இந்த சந்திப்பு நாளை மறும் தினம் செவ்வாய்க்கிழமை வரையில் பிட்போடப்பட்டுள்ளது.