ஜனா­தி­பதித் தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. எமது அணியை தோற்­க­டிக்கச் செய்­வ­தற்­கா­கவே திட்­ட­மிட்டு இழு­ப­றி­யான நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆகவே ஐ.தே.க தாம­திக்­காது வேட்­பா­ளரை பெய­ரிட வேண்டும். இந்த விட­யத்தில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடி­யாது என்று பெரு­ந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியின் போது தெரி­வித்தார். 

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியை உரு­வாக்­கு­வ­தற்­கான பணிகள் எவ்­வ­ளவு தூரம் நிறை­வ­டைந்­துள்­ளன?  

பதில்:- ஆகஸ்ட் ஐந்தாம் திகதி ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியை உரு­வாக்­கி­யி­ருந்தோம். அத்­துடன் அர­சியல் புரட்சி ஏற்­பட்­டதன் பின்னர் ஜன­நா­யக கட்­ட­மைப்­புக்­களைக் கொண்ட அனை­வரும் பங்­கேற்­க­வல்ல பரந்­து­பட்ட கூட்­ட­ணியை உரு­வாக்க வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைந்து எடுத்­து மே முதலாம் திகதி அறி­விப்­ப­தற்கு முனைந்­தி­ருந்தோம். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களால் கூட்­டணி அறி­விப்­பினை ஆகஸ்ட் ஐந்தில் வெளி­யி­டு­வ­தென தீர்­மா­னித்­தி­ருந்தோம். 

இருப்­பினும் ஐக்­கிய தேசியக் கட்­சியில் கூட்­டணி அறி­விப்­பினை விடுப்­ப­தற்கு முன்­ன­தாக வேட்­பா­ளரை அறி­விக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்டால் முரண்­பா­டு­களை தவிர்ப்­ப­தற்­காக அந்த நிகழ்வும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அத்­துடன் கூட்­டணி தொடர்பில் சஜித் தரப்பின் சார்பில் அஜித் பெரேரா, சுஜீவ சேர­சிங்க ஆகி­யோரால் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களை கவ­னத்தில் எடுத்து கலந்­து­ரை­யா­டினோம். 

அதன்­பி­ர­காரம், கடந்த 24ஆம் திகதி கூட்­டணி சம்­பந்­த­மாக பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்­க­ளா­கிய நாம் இணக்­கப்­பாட்­டினை எட்­டி­யி­ருந்தோம். எனினும்  சஜித்தை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்டும் என்றும் கடந்த 31ஆம் திக­திக்கு முன்­ன­தாக வேட்­பாளர் மற்றும் கூட்­டணி பொதுச்­செ­ய­லாளர் தொடர் பில் எமக்கு அறி­விக்­கப்­படும் என்றும் கபீர் ஹாசிம் அறி­வித்­தி­ருந்தார். 

கூட்­ட­ணியின் யாப்பு ஜன­நா­ய­க­மாக உள்­ள­தோடு அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. மேலும் யாப்பின் பிர­காரம் ஐ.தே.கவினால் வேட்­பா­ளரின் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்டு அது கூட்­ட 

­ணித்­த­லை­வர்­களின் அங்­கீ­கா­ரத்­தினைப் பெற வேண்டும். தற்­போது வேட்­பா­ளரின் பெயரை ஐ.தே.கவினுள் இறுதி செய்­வதில் இழு­ப­றி­யான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் அடுத்த கட்­டத்­திற்கு செல்ல முடி­யாத சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

கேள்வி:- இழு­ப­றிகள் நீடிக்­கின்ற நிலையில் பரந்­து­பட்ட கூட்­டணி சாத்­தி­ய­மா­கு­மென்று கரு­து­கின்­றீர்­களா? 

பதில்:- சர்­வா­தி­கா­ரத்­தினை விரும்பும் ஒரு­த­ரப்பு கோத்­தா­ப­ய ­வினை வேட்­பா­ள­ராக அறி­வித்­துள்­ளது. மறு­பக்­கத்தில் ஜே.வி.பி 

அநுரகுமார திஸா­நா­யக்­கவை முன்­னி­றுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் ஐ.தே.க உள்­ளிட்ட பரந்­து­பட்ட கூட்­ட­ணியின் வேட்­பா­ளரும் விரைந்து தமது வேட்­பா­ளரை அறி­விக்க வேண்டும். மாறாக இழு­ப­றி­யான நிலை­மைகள் தொடர்­வ­தா­னது எமது அணிக்கு தேர்தல் தோல்­வி­யையே பெற்­றுத்­தரும். எமது அணியை தோற்­க­டிக்கச் செய்­வ­தற்­கா­கவே இவ்­வா­றான இழு­ப­றி­யான நிலை­மைகள் திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன என்று கரு­து­கின்றேன். ஆகவே ஐ.தே.க நிலை­மை­களை புரிந்­து­கொண்டு விரைந்து வேட்­பாளர் தொடர்­பி­லான இறுதி முடி­வினை எடுக்க வேண்டும். அதனை நாம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். 

கேள்வி:- ஐ.தே.கவில் பிர­தமர் ரணில், சபா­நா­யகர் கரு, அமைச்சர் சஜித் ஆகி­யோரின் பெயர்கள் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்ற நிலையில் இந்த நபர்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறு­மய தனித்து நிலைப்­பா­டு­கள் எத­னையும் எடுத்­துள்­ளதா? 

பதில்:- இல்லை. ஐ.தே.க முதலில் தனது வேட்­பா­ளரை இறுதி செய்து கூட்­ட­ணித்­த­லை­வர்­களின் அங்­கீ­கா­ரத்­திற்­காக முன்­மொ­ழி­கின்­ற­போது எமது நிலைப்­பாட்­டினை பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம். அதற்கு முதல் எம்மால் எந்­த­வி­த­மான முடி­வு­க­ளையும் எடுக்க முடி­யா­துள்­ளது. 

கேள்வி:- தாங்கள் பங்­கேற்­றுள்ள கூட்­ட­ணிக்குள் குழப்­பங்கள் நீடிக்­கின்ற நிலையில் சுதந்­தி­ரக்­கட்­சியின் 68ஆவது மாநாட்டில் பங்­கேற்­றமை பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளதே?  

பதில்:- சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் எமக்கும் எவ்­வி­த­மான முரண்­பா­டு­க­ளு­மில்லை. எம்­முடன் அவர்கள் நட்பு ரீதி­யாக தற்­போதும் உள்­ளனர். அதன் அடிப்­ப­டை­யிலும், நாட்டின் பிர­தான கட்­சியின் தேசிய மாநாடு என்ற அடிப்­ப­டை­யிலும் எமக்கு விடுக்­கப்­பட்ட அழைப்­பினை ஏற்று பிறி­தொரு கட்­சியின் பிர­தி­நி­தி­யாக கலந்து கொண்­டி­ருந்தேன். 

கேள்வி:- 2020இல் சுதந்­தி­ரக்­கட்சி தலை­மையில் ஆட்சி அமையும் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ள நிலையில் தங்கள் தரப்­பு­ட­னான நட்பும் ஐ.தே.கவினுள் நீடிக்கும் முரண்­பா­டு­களும் அக்­கூட்­ட­ணியில் பங்­கேற்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு வழி­ச­மைக்­குமா? 

பதில்:- அவ்­வாறு உட­ன­டி­யாக கூற­

மு­டி­யாது. எனினும் எதிர்­கால நிலை­மை­களை பொறுத்தே எமது தீர்­மா­னங்கள் அமையும். சந்­தர்ப்­பங்கள் ஏற்­ப­டு­கின்­ற­போது சுதந்­தி­ரக்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­ய­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­வ­தற்கு வாய்ப்­புகள் இருக்­கின்­ற­னவே தவி­ர பொது­ஜ­ன ­பெ­ர­மு­ன­வுடன் எந்­த­வொரு கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கும் நாம் செல்­லப்­போ­வ­தில்லை என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம். 

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­ன­தாக பொதுத்­தேர்­த­லொன்­றுக்­கான சந்­தர்ப்­பங்கள் இருக்­கின்­றனவா? 

பதில்:- எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஜனா­தி­பதித் தேர்­தலை தள்­ளிப்­போட முடி­யாது. ஜனா­தி­பதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்­தப்­பட வேண்டும். அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. டிசம்பர் 8ஆம் திகதி இந்த நாட்டில் புதிய ஜனா­தி­பதி இருக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். 

கேள்வி:- 19ஆவது திருத்­தச்சட்டம் இரு­அ­தி­கார மையங்­களை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் அடுத்த ஆட்­சியில் அதனை முழு­மை­யாக நீக்க வேண்டும் என்றும் முன்னாள், இந்நாள் ஜனா­தி­ப­திகள் வலி­யு­றுத்­து­கின்­ற­னரே? 

பதில்:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் சர்­வ­ச­ன ­வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மற்றது. அனைத்து அதி­கா­ர­ வி­ட­யங்­களும் 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் ஊடாக நீக்­கப்­பட்­டா­கி­விட்­டது. அதற்­கா­கத்தான் 2015இல் ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கு மக்கள் ஆணையை வழங்­கி­யி­ருந்­தார்கள். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யி­லான பத­வியில் நீடிப்­ப­தற்­காக அல்ல. 

கேள்வி:- 1994ஆம் ஆண்­டி­லி­ருந்து நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்கம் தொடர்பில் பேசப்­பட்­டு ­வ­ரு­கின்ற நிலையில் அதனை முழு­மை­யாக நீக்கி வெஸ்ட் மினிஸ்டர் பாரா­ளு­மன்ற முறை­மையை அடுத்­து­வ­ரு­கின்ற குறு­கிய காலத்­திற்குள் ஸ்தாபிப்­ப­தற்கு வாய்ப்­புகள் உண்டா? 

பதில்:- அம்­மு­றைமை முழு­மை­யாக நீக்­கப்­ப­டு­வ­தென்றால் சர்­வ­ச­ன­ வாக் ­கெ­டுப்பு அவ­சி­ய­மா­கின்­றது. தற்­போ­தைய சூழலில் அது சாத்­தி­யமில்லை. 

கேள்வி:- எதிர்­வரும் தேர்­தலில் நிறை­வேற்று அதி­கார முறை­மையை முழு­மை­யாக ஒழித்தல் என்ற விட­யத்­திற்கு தேர்தல் அறிக்­கையில் முதன்­மைத்­தனம் வழங்­கப்­ப­டுமா?

பதில்:- அதற்­கான வாய்ப்­புகள் இருக்­கலாம். எனினும் நிறை­வேற்று அதி­காரம் முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்டும் என்ற அவ­சி­யத்­தினை நாட்டு மக்கள் கொண்­டி­ருக்­க­வில்லை. 

கேள்வி:- தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற கசப்பான அனுபவங்கள் தென்னிலங்கை தலைவர்கள் மீது எவ்வாறு தொடர்ந்தும் நம்பிக்கை கொள்வது என்ற மனநிலையை இயல்பாகவே ஏற்படுத்துகின்றதல்லவா?

பதில்:- ஆம், தமிழ் மக்களுக்கு அல்ல, தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினால் நம்பிக்கை வைப்பது தொடர்பில் கேள்விகள் இல்லாமலில்லை. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை என்பது நாட்டின் பொதுவான பிரச்சினையாகும். ஆனால் ஒப்பீட்டு ரீதியாக பார்க்கின்றபோது ஜனநாயக விழுமியங்களுடனான முன்னேற்றங்கள் எவையுமே ஏற்படவில்லை என்று கூறமுடியாது. 

நேர்­காணல்:- ஆர்.ராம்