(ஆர்.யசி)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவிப்பைவும் விடுத்துள்ளார். 

அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்களை வரவழைத்து தான் சாட்சியமளிக்க தயார் என  எழுத்து மூலம் இந்த அறிவித்தலை ஜனாதிபதி தெரிவிக்குழுவிடம் வழங்கியுள்ளார் என்பதை தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனத குமாரசிறி உறுதிப்படுத்தினார்.  

மேலும் தெரிவுக்குழுவின் கால எல்லையை இம்மாதம் இறுதி வரைக்கும் நீட்டித்துள்ள போதிலும் குறித்த திகதிக்குள் தெரிவுக்குழு அறிக்கையை முழுமைப்படுத்த முடியாத காரணத்தினால் தெரிவுக்குழு கால எல்லையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கவும் தெரிவிக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய சபாநாயகர் அணிமதியை கோரும் வகையில் அடுத்த பாராளுமன்ற அமைர்வுகளின் பொது யோசனை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்குழு தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.