பிறந்து 6 நாட்­க­ளே­யான குழந்தையொன்றை தனது கைப்­பையில் வைத்து கடத்தி வந்த ஜெனிபர் எரின் டால்போட் என்ற அமெ­ரிக்க பெண், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலை­யத்தில் வைத்து குடி­யு­ரிமை பணி­யா­ளர்­களால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த புதன்­கி­ழமை பிலிப்­பைன்ஸின் மணிலா விமான நிலை­யத்­திற்கு வந்த அவர் மீது  சந்­தே­க­ம­டைந்த விமா­ன­நி­லைய ஊழி­யர்கள் அவரை தடுத்து வைத்து சோத­னைக்­குட்­ப­டுத்­திய போதே அவரின் கைப்­பை­யி­லி­ருந்து ஆண் குழந்­தை­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

குழந்­தைக்கு கடவுச்சீட்டு மற்றும் அர­சாங்க அனு­மதி எதையும் டால்போட் வைத்­தி­ருக்­க­வில்லை என விமான நிலைய அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும், குழந்­தை­யுடன் டால்போட் டெல்டா ஏர்லைன்ஸ் விமா­னத்தின் மூலம் அமெ­ரிக்­கா­விற்கு செல்ல திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யி­லேயே கைது செய்­யப்­பட்­ட­தாக  விமான நிலைய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

தற்­போது அவர் தேசிய புல­னாய்வு பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வருவதுடன், குழந்தை அரசாங்க நலப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.