அதி சிறந்த பரா மெய்வல்லுநர்கள் ஜனனி, திசாரா, ரவிந்து, நுவன், புத்திக்க மட்டு, வவுனியா, மன்னார் பரா மெய்வல்லுநர்களுக்கும் பதக்கங்கள்

Published By: Digital Desk 4

08 Sep, 2019 | 12:40 PM
image

(நெவில் அன்தனி)

தேசிய பராலிம்பிக் சங்கத்தினால் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்கள்  நடத்தப்பட்ட தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்கள் பிரிவில் அதி சிறந்த கனிஷ்ட பரா மெய்வல்லுநராக ஜனனி தனஞ்சயவும் (களனி, செர்ட் விளையாட்டுக் கழகம்), சிரேஷ்ட பரா மெய்வல்லுநராக திசாரா ஜயசிங்கவும் (ரிஹாப் லங்கா விளையாட்டுக் கழகம்) தெரிவு செய்யப்பட்டு விருதுளை வென்றனர்.

ஆண்கள் பிரிவில் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுநராக ரவிந்து திரஞ்சயவும் (ரிஹாப் லங்கா விளையாட்டுக் கழகம்), அதி சிறந்த சிரேஷ்ட மெய்வல்லுநர்களாக (இணை விருது) நுவன் இந்திக்க (இலங்கை சிற்றாயுதப் படைப் பிரிவு), புத்திக்க இந்த்ரபால (கமாண்டோ படைப் பிரிவு விளையாட்டுக் கழகம்) ஆகியோரும் தெரிவாகி விருதுகளை வென்றெடுத்தனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய பரா மெய்வல்லநர் போட்டிகளில் 100 மீற்றர், 200 மீற்றர் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்ற அமில ப்ரசான் வருடத்தின் அதி சிறந்த பரா மெய்லுநராகத் தெரிவானார். அவரது விருதை அவர் சார்பில் நுவன் இந்திக்க பெற்றார்.

இவ் வருட தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகளில் சிரேஷ்ட பெண்கள் பிரிவில் ரிஹாப் லங்கா விளையாட்டுக் கழகமும் சிரேஷ்ட ஆண்கள் பிரிவில் இலங்கை சிற்றாயுதப் படைப் பிரிவும் சம்பியனானகின. இந்த இரண்டு பிரிவுகளிலும் முறையே சீதுவை தொழில் பயிற்சி நிலைய விளையாட்டுக் கழகம், விஜயபாகு காலாட்படைப் பிரிவு ஆகியன இரண்டாம் இடங்களைப் பெற்றன.

கனிஷ்ட பெண்கள் பிரிவில் ரத்மலானை பார்வை குறைபாடுடையோர் பாடசாலையும் கனிஷ்ட ஆண்கள் பிரிவில் ரிஹாப் லங்கா விளையாட்டுக் கழகமும் சம்பியனாகின.

வடக்கு கிழக்கு கழகங்கள் பங்கேற்பு

இவ் வருட தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வெறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசும்  மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியதுடன் அவர்களில் பலர் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசியாட்டா அனுசரணை வழங்கிய தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகளின் பரிசளிப்பு வைபவத்தில் போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிரதம அதிதியாகவும் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் தேசிய விற்பனை உதவித் தலைவர் ப்ரதீப் கீர்த்திரத்ன சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்.

பதக்கம் வென்ற மட்டு பரா மெய்வல்லுநர்கள்

எவ். 42/43 கனிஷ்ட ஆண்கள் குண்டு எறிதல்

கே. சஜிந்தன் (மட்டக்களப்பு) 2.79 மீ. தங்கம்

எவ் 11 கனிஷ்ட ஆண்கள் நீளம் பாய்தல்

பி. பிரஷோபன் (மட்டகளப்பு) 2.56 மீ. வெள்ளி

ரீ42/44/64 கனிஷ்ட ஆண்கள் 100மீ.

கே. சஜிந்தன் (மட்டக்களப்பு) 36.6 செக். வெள்ளி

ரீ 45/46/47 சிரேஷ்ட பெண்கள் 100 மீ.

எஸ். புவனலோஜினி (மட்டக்களப்பு) 19.35 மீ. வெண்கலம்

எவ். 11 சிரேஷ்ட பெண்கள் குண்டெறிதல்

வி. புவிதா (மட்டக்களப்பு) 3.88 மீ. தங்கம்

எஸ். நேஜிதா (மட்டக்களப்பு) 2.27 செக். வெண்கலம்

ரீ 20 சிரேஷ்ட பெண்கள் 1,500 மீ.

கே. நிசாந்தினி (மட்டக்களப்பு) 8 நி. 43.02 செக். வெண்கலம்

எவ் 42/43/44/62/64 சிரேஷ்ட பெண்கள் தட்டெறிதல்

எஸ். கலாவதி (மட்டக்களப்பு) 13.06 மீ. வெண்கலம்

எவ். 45/46/47 சிரேஷ்ட பெண்கள் நீளம் பாய்தல்

எஸ். புவனலோஜினி (மட்டக்களப்பு) 2.85 மீ. வெண்கலம்

ரீ 42/44 சிரேஷ்ட பெண்கள் குண்டெறிதல்

எஸ். கலாவதி (மட்டக்களப்பு) 5.01 மீ. வெண்கலம்

ரீ 20 சிரேஷ்ட பெண்கள் 400 மீ.

ஏ. கேதுஜா (மட்டக்களப்பு) 1 நி. 35.5 செக். வெள்ளி

எவ் 57 சிரேஷ்ட பெண்கள் ஈட்டி எறிதல்

எ;. கலாவதி (மட்டக்களப்பு) 12.98 மீ. தங்கம்

ரீ 11 சிரேஷ்ட பெண்கள் 100 மீ.

எஸ். டிலோஜினி (மட்டக்களப்பு) 28.51 செக். வெண்கலம்

வரோத் வவுனியா பரா மெய்வல்லுநர்கள்

எவ் 42 கனிஷ்ட பெண்கள் தட்டெறிதல்

எம். விதுர்சனா (வரோத் வவுனியா) 8.85 மீ. தங்கம்

எல். ஜீவனா (வரோத் வவுனியா) 7.75 மீ. வெள்ளி

எவ் 57 சிரேஷ்ட பெண்கள் தட்டெறிதல்

ஆர். சரோஜினி (வரோத் வவுனியா) 2.58 மீ. வெண்கலம்

ரீ 45/46/47 சிரேஷ்ட பெண்கள் 200 மீ.

எஸ். கஸ்தூரி (வரோத் வவுனியா) 44.17 செக். வெண்கலம்

கே. மிதுலா (வரோத் வவுனியா) 18.84 மீ. வெள்ளி

எவ் 57 சிரேஷ்ட பெண்கள் ஈட்டி எறிதல்

வை. பிலோமினா (வரோத் வவுனியா) 11.12 மீ. வெண்கலம்

ரீ. 44ஃ62ஃ64 சிரேஷ்ட ஆண்கள் 100 மீ.

பி. கபில்ராஜ் (வரோத் வவுனியா) 17.29 மீ. வெண்கலம்

மன்னார் மா.தி.பு.ச. பரா மெய்வல்லுநர்கள்

ரீ 42/44 சிரேஷ்ட பெண்கள் குண்டெறிதல்

என். சுகந்தி (மன்னார் மா.தி.பு.ச.) 5.44 மீ. தங்கம்

எவ் 42/43/44/62/64 சிரேஷ்ட பெண்கள் தட்டெறிதல்

என். சுகந்தி (மன்னார் மா.தி.பு.ச.) 14.40 மீ. தங்கம்

ரீ 42/44 சிரேஷ்ட பெண்கள் 100 மீ.

என். சுகந்தி (மன்னார் மா.தி.பு.ச.) 41.07 மீ. வெள்ளி

எவ் 42/43/44/62/64 சிரேஷ்ட பெண்கள் தட்டெறிதல்

ரீ 12/13 கனிஷ்ட ஆண்கள் 200 மீ.

ஆர். சுபாகரன் (இரத்மலானை குருடர் பாடசாலை) 45.70 செ. வெள்ளி

முஸ்லிம் பரா மெய்வல்லுநர்கள்

ரீ 42/44/64 கனிஷ்ட ஆண்கள் 100மீ.

அஹமத் அனீக் (ரிஹாப் லங்கா) 16.3 செக். தங்கம்

எவ் 12/13 கனிஷ்ட ஆண்கள் நீளம் பாய்தல்

எம்.எஸ்.எம். நபீஸ் (இஸ்லாமிய நிலையம்)  3.29 மீ. வெள்ளி

எவ் 45/46/47 கனிஷ்ட ஆண்கள் நீளம் பாய்தல்

அஷ்ரப் அலி அஹ்மத் (ரிஹாப் லங்கா) 4.63 மீ. வெள்ளி

எவ் 20 கனிஷ்ட ஆண்கள் குண்டு எறிதல்

எம்.எச். பாஹிர் (இஸ்லாமிய நிலையம்) 5.71 மீ. வெள்ளி

எம்.எச்.எம். லாபிர் (இஸ்லாமிய நிலையம்) 5.54 மீ. வெண்கலம்

எப். 44/64 கனிஷ்ட ஆண்கள் நீளம் பாய்தல்

அஹமத் அனீக் (ரிஹாப் லங்கா) 5.29 மீ. தங்கம்

எவ் 11 கனிஷ்ட ஆண்கள் நீளம் பாய்தல்

எம். ரிஹாம் (இரத்மலானை குருடர் பாடசாலை) 1.85 மீ. வெண்கலம்

ரீ 4546/47 கனிஷ்ட ஆண்கள் 100 மீ.

அஷ்ரப் அலி அஹ்மத் (ரிஹாப் லங்கா) 12.20 தங்கம்

எவ் 12/13 கனிஷ்ட ஆண்கள் தட்nறிதல்

எம். நபீஸ் (இஸ்லாமிய நிலையம்) 10.10 மீ. தங்கம்

ரீ 44/45 கனிஷ்ட ஆண்கள் 200 மீ.

அஹமத் அனீக் (ரிஹாப் லங்கா) 37.6 செக். தங்கம்

ரீ 45/46/47 கனிஷ்ட ஆண்கள் 200 மீ.

அஷ்ரப் அலி அஹ்மத் (ரிஹாப்) 26.8 செக். தங்கம்

எவ் 12 சிரேஷ்ட ஆண்கள் குண்டெறிதல்

எம். அஸ்மான் (இசுறு) 7.07 மீ. வெண்கலம்

ரீ 20 சிரேஷ்ட ஆண்கள் 400 மீ.

எம்.எச். பாஹிர் (இஸ்லாமிய நிலையம்) 1 நி. 10.8 செக். வெள்ளி

எம்.கே. அமர் (இசுறு) 1 நி. 12 95 செக். வெண்கலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49