தமிழன், நிழல்கள், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கியவரும், பிரபல நடிகருமான ராஜசேகர் காலமானார்.

இவர் திரைபடங்களில் மாத்திரமன்றி, சின்னத்திரையில் தடம் பதித்து ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதோர் நடிகராவார்.

இதற்கு, சரவணன் மீனாட்சி தொடர் நல்தோர் உதாரணமாகும். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.