அனுராதபுரம், ஹொரவபெத்தானை பகுதியில் ஆன்மீக முறையில் நோயினை குணப்படுத்தும் முகாமொன்றில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹொரவிபொத்தானை விளையாட்டரங்கொன்றில் நேற்றிலிருந்து இன்றுபிற்பகல் வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆன் மீக சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக பல வட்டாரங்களிலுருந்தும் நோயாளர்கள் வருகைத்தந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை இவ்வாறு வருகைத் தந்த நோயாளர்களுள் சுமார் 20 பேர் நோய் அதிகரித்த நிலையில் ஹொரவிபொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நோயாளர்கள் அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.