வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுவை மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, புதுவை மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, ஜனநாயக திருவிழாவான தேர்தலில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.