முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (07) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக இரண்டு வருடங்கள் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று செல்லவுள்ள நிலையிலேயே மரியாதை நிமித்தமும் தனது ஓய்வினை அறிவிக்கும் பொருட்டும் மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆளுநரை சந்தித்தார்.

இறுதிப்போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும் மாவட்டத்தினை மீளக்கட்டியெழுப்புவதற்காகவும் கடந்த இரண்டு வருடங்கள் சேவையாற்றியதை பாராட்டிய ஆளுநர் சிறப்பான ஓய்வு காலத்திற்காகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அத்துடன் திருக்குறள் புத்தகம் ஒன்றையும் நினைவுப்பரிசாக ஆளுநர் இதன்போது வழங்கினார்.