பிரான்ஸ் நாட்டில் அதிகாலையில் கூவுவது இடையூறாக இருப்பதாக தொடர்ந்த வழக்கில் சேவல் வெற்றி வெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘ஒலேரான்’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் மோரிஸ் என்ற சேவல் கூவுவது தனக்கு  இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 

இளஞ்சேவல் பிரான்ஸ் நாட்டுச் சின்னம் என்பதால் இந்த வழக்கு கவனத்தை ஈர்த்தது.

“மோரிஸ் இந்த வழக்கில் ஜெயித்துள்ளது. வழக்கைத் தொடுத்தவர்கள் இந்தச் சேவலின் உரிமையாளருக்கு 1,000 யூரோ (1,500 வெள்ளி) வழங்கவேண்டும்,” என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கு தொடர்ந்தவர் செயிண்ட்-பியெர்ரெ-ஒலெரான் தீவில் உள்ள தனது சொகுசுப் பங்களாவில் விடுமுறையை கொண்டாட வந்தவர். 

கிராமப்புற மக்களுக்கும் விடுமுறை வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே நிலவும் மோதல்களை இந்த வழக்கு பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டில், அதிகாலையில் கோயிலில் அடிக்கும் மணி ஓசை தொந்தரவாக இருப்பதாக சொகுசுப் பங்களாவிற்கு விடுமுறையைக் கொண்டாட வந்தவர்கள் புகார் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.