பங்களாதேஷ் கடற்படை கப்பல் ஒன்று நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு இன்று  வருகை தந்துள்ளது.

'சோமுத்ரா அவிஜான்' என்றழைக்கப்படும் இக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.

நல்லெண்ண அடிப்படையில் வருகைத்தந்த குறித்த கப்பலின் அதிகாரிகளுடன் இலங்கை கடற்படை அதிகாரிகள் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தின்போது, நாட்டிலுள்ள பிரபலமான இடங்களைப் பார்வையிடுவதற்கும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.