(இராஜதுரை ஹஷான்)

 உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும்  தனித்து வேட்பாளரை களமிறக்காது. ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்கமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  ஜனாதிபதி தேர்தலில்  தனித்து வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக  தவறான  தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒருபோதும் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராக செயற்பட மாட்டார்.

 ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம் பெற்ற  சந்திப்பில் அரசியல் ரீதியில் பல  முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. அவற்றின் பெறுபேறு இன்னும் ஓரிரு வாரங்களில்  வெளிவரும் என தெரிவித்தார்.