தன்னை ‘ஜோக்கர்’ என்று கூறிய முக ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஸ்டாலின் ஓமக்குச்சி நரசிம்மன் போல் இருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறது. செம்மொழி மாநாடு, ஒரு குடும்ப மாநாடு. அதனால் எந்த பயனும் இல்லை.

 நாங்குநேரி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸார் தன்மானம் உள்ளவர்கள். தி.மு.க. போட்டியிட்டால் காங்கிரஸார் தன்மானம் இல்லாதவர்கள். ஜென்டில்மேன் அக்ரீமெண்ட்டை கடைப் பிடிப்பது அ.தி.மு.க.தான். பா.ம.க. விற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்துள்ளோம். 

ஒப்பந்தத்தை ஒருபோதும் மீற மாட்டோம். ஆனால் தி.மு.க. ஜென்டில்மேனாக இருப்பார்களா? என்று கூறமுடியாது. என்னை ஜோக்கர் என்று மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்தான் ஓமகுச்சி நரசிம்மன் போல் இருக்கிறார். என்னையும், ஸ்டாலினையும் நிற்கவைத்து பார்த்தால் யார் ஜோக்கர்? என்று தெரிந்துவிடும்.” என்றார்.