புரோஸ்டேட் புற்றுநோயிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Daya

07 Sep, 2019 | 03:17 PM
image

ஆண்களின் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் கடைசி உறுப்பாகவும், பாலின சுரப்பியாகவும் செயற்படும் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை கண்டறியப் பட்டிருக்கிறது.

1990கள் முதல் தற்போது வரை ப்ராஸ்டேட் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200% அதிகரிப்பதாகவும், இந்த நோய் முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்பட்டது என்றும், தற்போது 40 வயது நிரம்பிய ஆண்களுக்கு ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பு ஏதுமில்லாமல் சிறுநீர் கழித்தலில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது சிறுநீருடன் இரத்தப்போக்கு காணப்பட்டாலோ உடனடியாக P S A எனப்படும் பரிசோதனையை செய்துகொள்ளவேண்டும். இந்த பரிசோதனை செய்து கொண்டால் புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறதா? அல்லது புற்றுநோய் தொடக்க நிலையில் இருக்கிறதா? அல்லது எந்த நிலையில் இருக்கிறது? என்பதனை துல்லியமாக கண்டறியலாம்.

இத்தகைய புற்றுநோய் கிராமப்புறங்களில் வாழும் ஆண்களைவிட, நகர்ப்புறங்களில் வாழும் ஆண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. அதே தருணத்தில் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஆண்களைக் காட்டிலும் மேலைத்தேய உணவு கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஆண்களுக்கு அதிக அளவில் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

சிலருக்கு ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் காரணமாகவும் அங்கு புற்று நோய் ஏற்படக்கூடும். சிகரெட் புகைப்பவர்களுக்கு இத்தகைய புற்றுநோயின் தாக்கம் அதிகம் இருப்பதையும் காண முடிகிறது. புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சை பெறாவிட்டால் அது உடலின் பிற பாகங்களுக்கு பரவி குறிப்பாக எலும்புகளுக்குள் ஊடுருவி விட்டால்.. முதுகுவலி மற்றும் கால்கள் செயலிழப்பு போன்றவை ஏற்படக்கூடும்.

நோயாளியின் வயது, உடலில் உள்ள கோளாறுகள் ஆகியவற்றை பொறுத்து அவருடைய புராஸ்டேட் சுரப்பி முற்றிலுமாக அகற்றி, அதனை சிறுநீர் பையுடன் இணைக்கும் சத்திர சிகிச்சையை செய்து இத்தகைய புற்றுநோய்க்கு முழுமையான தீர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது பாதுகாப்பான முறையிலும் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய சத்திரசிகிச்சை தற்பொழுது றொபாடீக் மூலமாக மேற்கொள்வதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப இயலுகிறது. நுண் கதிர்வீச்சு என்ற சிகிச்சை மூலமும் இதனை முழுமையாக குணப்படுத்த இயலும். சிலருக்கு மட்டும் மிக அரிதாக ஆண் தன்மையை கொண்ட டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹோர்மோனின் அளவை முழுமையாக கட்டுப்படுத்தி, இந்த புற்றுநோயின் பரவலை கட்டுப்படுத்த இயலும். இதன் மூலம் புற்று நோய்க்கு சிறந்த நிவாரணத்தையும் வழங்க இயலும்.

எந்த நிலையில் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும் அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதனை முழுமையாக குணப்படுத்த இயலும். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு படித்த மற்றும் பாமர ஆண்களிடம் முழுமையாக ஏற்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29