(எம்.மனோசித்ரா)

2019 ஆம் ஆண்டுக்கான தேருனர் இடாப்பில் தமது பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் இம் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேருனர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை www.elections.gov.lk  என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணைய தளத்தினூடாகவோ அல்லது தத்தமது கிராம சேவகர் அலுவலத்தினூடாகவோ அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk  என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து தேவையான மொழியைத் தெரிவு செய்ததன் பின்னர், ' எனது ஆட்பதிவு தொடர்பான விபரங்கள் ' என்ற தெரிவிற்குள் செல்ல வேண்டும். 

தொடர்ந்து தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் நிர்வாக மாவட்டம் ஆகியவற்றை தெரிவு செய்வதன் மூலம் தேருனர் இடாப்பில் தமது பெயர் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.