பிரத்தியேக வகுப்பிற்கு தயாரான மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

07 Sep, 2019 | 04:04 PM
image

குளித்த பின் தனது  வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய  பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை(7.9.2019) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது, 

பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி திடீரென எரிந்த நிலையில்  சடலமாக தரையில் வீழ்ந்த நிலையில்அலறியுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கதிர்காமத்தம்பி வீதி  நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17)  என்பவர் ஆவார்.

சம்பவம் இடம்பெற்ற வேளை தாய் தந்தை எவரும் வீட்டில் இருக்கவில்லை.குறித்த மாணவியின் சகோதரர்  மாத்திரமே  இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து  அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த நேரத்தில் பரவியிருந்த  தீயினை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாக அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

குறித்த சடலாமாக மீட்கப்பட்ட மாணவி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.போ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  சம்மாந்துறை பொலிஸார் மின்னொழுக்கினால் எவ்வாறு தீ பரவியது? கொலையா ?அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32