வவுனியா பம்பை மடு பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்தமையால் பதற்றமான சூழல் ஒன்று  ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று காலை 10.15 மணியளவில் செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று  பம்பை மடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பஸ்ஸின் எஞ்சின் பகுதியில் சிறிய அளவில் தீப்பிடித்துள்ளது. இதனால் பயணிகள் உடனடியாக பஸ்ஸிலிருந்து  கீழே இறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இதனால் சற்று நேரம் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. பின்னர் வருகை தந்த  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏறிக் குறித்த பயணிகள் வவுனியா நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.