(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை 2015ம் ஆண்டு பிரதமராக்குவோம் என்று சுதந்திர கட்சியினர் வழங்கிய  வாக்குறுதியினை அன்று நிறைவேற்றவில்லை.

மொட்டு சின்னத்தை  முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்த சுதந்திர கட்சி முயற்சிக்கின்றது. என பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்து இணைந்துக் கொள்வது தொடர்பில் ஒரு புறம் பேசிக் கொள்கின்றது. 

மறுபுறம்  முரன்பாடுகளை தோற்றுவிக்கும் விதமாகவும் கருத்துக்களை வெளிப்பிடுத்திக் கொள்கின்றது. உண்மையில் இணைந்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை இடம் பெறுகின்றதா அல்லது   இணக்கமாக செயற்படுகின்றோம் என்று  வெளியில் காண்பித்துக் கொள்கின்றார்களா என்ற சந்தேகம் காணப்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.