(இராஜதுரை ஹஷான்)

எல்பிடிய பிரதேச சபை தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுதவற்காக  அனைத்து செயற்பாடுகளையும்  முன்னெடுக்கும் பொறுப்பு  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பஷில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  தேர்தல்  பிரச்சார ஒழுங்குப்படுத்தலுக்காக எழுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொமுஜன  பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

எல்பிடிய  பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் மாதம் இரண்டாம் வாரத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரச்சார மற்றும் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அடங்கிய  குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

அக்குழுவில் எழுவர் அங்கத்துவம் வகிக்கவுள்ளார்கள். காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்பதிரன,மொஹான்டி சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சமிலி விதானகே, துஸான் காரியவசம், சம்பத் அதுகோரல ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.