அசுரன் முன்னோட்டம் நாளை வெளியீடு

Published By: Daya

07 Sep, 2019 | 10:22 AM
image

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘அசுரன்’ படத்தில் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.

வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்களின் தொடர் தோல்விகளால் ஒரு கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறார் நடிகர் தனுஷ். இதற்காக அவர் தெரிவு செய்த இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் = தனுஷ் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘அசுரன்’ படத்தின் மீது நடிகர் தனுஷ் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.

இதனுடைய தனுஷ் நடிப்பில் நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த கௌதம் வாசுதேவ் இயக்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ செப்டெம்பர் 6ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு மீண்டும் அந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்காக நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் முன்னோட்டத்தை திட்டமிட்ட திகதிக்கு முன்னதாக அதாவது நாளை வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்தப்படத்தில் தனுஷ், மலையாள நடிகை மஞ்சு வாரியர், கருணாஸின் மகன் கென், இங்கிலாந்தை சேர்ந்த டிஜே, ஆடுகளம் நரேன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கும் ‘அசுரன் ’ஒக்டோபர் மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right