(நா.தனுஜா)

இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும், வர்த்தக வாய்ப்புக்களை அடையாளங்காண்பது தொடர்பிலும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் முதற்தடவையாகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது.

முதலீடு மற்றும் வாணிப வாய்ப்புக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்து பிரிட்டனின் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. 

பிரிட்டன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்த சமூகத்தை இலக்காகக் கொண்டு 'இலங்கையில் காணப்படும் முதலீட்டு, வர்த்த வாய்ப்புக்கள்' அடங்கிய தரவுக்கோவை அண்மையில் லண்டனில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதிலேயே புலம்பெயர்ந்து  வாழும் இலங்கையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.