(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் மோசடி செய்வதற்காக தமக்கு சார்பாக செயற்படும் மாவட்ட அதிபர்களை நியமிக்க சதித்திட்டம் தீட்டுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளமை உண்மைக்கு புறம்பானது என்று உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது மாவட்ட அதிபர்களுக்கு தெரிவத்தாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அதிகாரம் மிகுந்தவர்களாகக் காணப்படுவார்கள். எனவே இவ்வாறான அதிகாரங்கள் உடையவர்களை தமக்கு சார்பானவர்களாக்கிக் கொண்டால் தேர்தலின் போது இலகுவாக மோசடிகளில் ஈடுபட முடியும் என்பதற்காக அமைச்சர் வஜிர அபேவர்தன சதித்திட்டம் தீட்டுவதாக ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். 

விமல் வீரவன்ச முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் , அமைச்சர் வஜிர அபேவர்தன ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளதோடு, விமல் வீரவன்சவினுடைய குற்றச்சாட்டுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.