டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தெற்காசிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு மக்களின் அதிகரிக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை கருதுகிறது. இதற்காக பல வழிகளில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.

டெங்கு என்பது உலகின் வெப்ப மண்டல நாடுகளில் ஃபிளேவி வைரஸ் (Flavi Virus) எனும் ஒரு வகை வைரஸால் ஏற்படும் தொற்றுநோய். பலரும் நினைப்பதுபோல் டெங்கு என்பது ஒரு வகை காய்ச்சல் மட்டுமல்ல. காய்ச்சல் டெங்கு நோயின் ஒரு அறிகுறியே. 

முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் டெங்கு காய்ச்சல் அது அடுத்த நிலையாக, உடலில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஊடுருவி, ரத்தக் கசிவை ஏற்படுத்தி, இறப்பையும் உண்டாக்க கூடியவை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். அதனால் இத்தகைய காய்ச்சல் குறித்தும், டெங்கு நோயின் பாதிப்பும் குறித்தும் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

டெங்கு நோய்க்கு காரணமான ஃபிளேவி வைரஸ், மேலும் DENV 1,2,3,4 என 4 வகைகளாக பகுக்கப்படுகிறது. டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதனைக் கடித்த நுளம்புகள், அதை மற்றவர்களுக்கும் கடத்துகிறது. எனவே டெங்கு வைரஸ் தொற்றுக்கான காரணியாக நுளம்புகள் உள்ளன.  எல்லாவகையான நுளம்புகளும் டெங்கு வைரசை கடத்துவதில்லை. நல்ல நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் Aedes Aegypti. Aedes Albopictus என்னும் இரண்டு வகை நுளம்புகள் மட்டுமே டெங்கு வைரஸை கடத்துகின்றன. இவை பகலில் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கி மனிதர்களின் இரத்தத்தை குடிப்பது இந்த வகை நுளம்புகளில் சிறப்பு குணமாகும்.

 டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டு வைரஸ் தொற்று தீவிர நிலையில் இருக்கும்போது நுளம்புகள் அவரை கடித்தால், வைரஸ் அந்த உடம்பினுள் கடத்தப்படுகிறது. நுளம்பு, தன்னுடைய உடலில் அதிக வீரியமிக்க வைரஸாக வளர்த்தெடுக்க 8 முதல் 12 நாட்கள் தேவைப்படுகிறது. பின்னர் அது மற்றொரு மனிதனை கடிக்கும் போது அவரது உடலில் அந்த வைரஸை கடத்துகிறது. அதன் பிறகு நான்கு முதல் ஏழாவது நாள் அவருடைய உடலில் அறிகுறிகளை காண்பிக்க ஆரம்பிக்கும். இப்படி டெங்கு வைரஸ் கடத்தும் வேலையை செய்யும் நுளம்புகளை ஒழிப்பதால் மட்டும் டெங்குவை அடியோடு அழிக்க முடியும். இதற்காக நாம் நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திட வேண்டும். இதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் நாம் எம்முடைய முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். 

தீவிர காய்ச்சலுடன் உடல் முழுவதும் வலி, தலைவலி, கண்களில் பின்புறம் வலி, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளில் ஒன்றோ அல்லது பலவோ இதன் போது ஏற்படக்கூடும். இரத்த பரிசோதனையில் எம்முடைய உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கும். வயிற்று வலி மற்றும் வயிற்று தசை இறுக்கம் அதிகரிக்கும். கல்லீரல் வீக்கம் ஆகியவை நோயின் வீரீயத்தை குறிக்கும் அறிகுறி. இத்தகைய நோயின் அறிகுறி தோன்றியவுடன் நிலவேம்பு கசாயம் குடிப்பது இதற்கான சிறந்த நிவாரணம் மற்றும் தீர்வும் கூட. இருப்பினும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.