இயற்கைச் சூழலைப்பாதிக்கும் வகையில் இயற்கை வளங்கள் அழிப்பு - பொதுமக்கள் விசனம்

Published By: Daya

06 Sep, 2019 | 02:52 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கைச் சூழலைப்பாதிக்கும் வகையில் இயற்கை வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன  இதனைத்தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட பகுதியின் அதிகளவான இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டின் பின்னர் இங்குள்ள வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. அதாவது சட்டத்திற்கு முரணான வகையில் மணல் கிரவல் அகழ்வுகள் காடழிப்புக்கள் என பெறுமதி வாய்ந்த வளங்கள் அழிக்கப்படுகின்றன.

இதனைவிட முறையற்ற விதத்திலான அனுமதிகள் வளங்கப்பட்டும் இவ்வாறு வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்வுகள் மணல் அகழ்வுகளுக்கான அனுமதிகள் மாவட்டத்தை சேர்ந்த தனி நபர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ வளங்கப்படாது தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வளங்கப்பட்டு வருகின்றன.

ஓட்டுசுட்டான் துணுக்காய்  போன்ற பகுதிகளிலும் பெருமளவான கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட வவுனிக்குளம் மற்றும் ஏனைய குளங்களுக்கு நீரைச் சேர்க்கும் ஆறுகள் துண்டாடப்பட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான அனுமதிகள் யாவும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெருமளவான வளங்களை அழிக்கும் வகையில் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளால் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன இவற்றை உரிய அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு இவ்வாறான அனுமதிகளை கிராம மட்ட அமைப்புக்களுக்கு வழங்கி வழங்களை பாதுகாக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் பொது அமைப்புக்களும் கோரிக்ககை விடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00