(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்ற உறுப்பினர்களின் கேளவிகளுக்கு அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தனது கவலையை தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. ஆரம்பமாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்களால் கேட்கப்படும் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றேன். 

அத்துடன் இது தொடர்பாக  நேற்றைய தினம் சபை முதல்வரால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இறுதியில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக செயற்குழு கூட்டத்தின்போது கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி, இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனால் இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் நிகழாதவகையில் பார்த்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவ்வாறான நிலைமைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை ஒழுக்கத்தை பேணி செயற்படுவது அவசியமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதொடர்பில் கடந்த நான்கு வருடங்களாக திருப்பத்திரும்ப தெரிவிப்பதற்கு ஏற்பட்டமையையிட்டு நான் மிகவும் கவலைப்படுகின்றேன் என்றார்.