நாளை நிலவில் தரையிறங்குகிறது சந்திரயான் 2 : இஸ்ரோ

Published By: Digital Desk 3

06 Sep, 2019 | 12:15 PM
image

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நாளை (07.09.2019) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் திகதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. 

சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை கொண்ட விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் (ஆர்பிட்டர்) ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் (லேண்டர்) ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.

பூமியில் இருந்து புறப்பட்டு 47 நாட்களுக்கு பிறகு சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் தற்போது, சரியாக நிலவிற்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த லேண்டர் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது. லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்வையிடுவார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக இஸ்ரோ இன்று (06.09.2019) வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 7 ம் திகதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை லேண்டர் விக்ரம் நிலவில் மெல்ல மெல்ல தரையிறங்கும். இதை தொடர்ந்து நாளை காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் ரோவர், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெளிப்பட்டு நிலவில் தனது ஆய்வை துவக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் 78 விநாடிகளில் லேண்டர், நிலவில் தரையிறங்கும் பணி நிறைவடையும். நிலவின் தென் பகுதியில் 350 கி.மீ., தூரத்தில் சந்திரயான் 2 தரையிறங்க உள்ளது.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் எப்படி தரையிறங்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் குறித்து இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் லேண்டர், நிலவில் இருந்து புகைப்படங்களை அனுப்ப துவங்கும். இந்த திட்டம் வெற்றி அடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26